Who We Are
சோழிய வெள்ளாளர் என்பவர்கள்...
சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். சோழிய வெள்ளாளர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். சோழிய வெள்ளாளர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.
சோழிய வெள்ளாளர்கள்பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
History
சங்கத்தின் வரலாறு
நமது சோழிய வெள்ளாளர் சங்கம் 1943ஆம் ஆண்டு நம் சமுதாய பெரியோர்கள் 11 பேர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது 1944 ஆம் ஆண்டு முறையாக ச 2/44 எண்படி சோழிய வெள்ளாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி என்று பதிவு செய்யப்பட்டு இயங்கிவந்தது. பின்னர் 1965 ம் ஆண்டிலிருந்து அன்றைய சூழ்நிலைக்கேற்ப வெள்ளாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட்டு வந்தது 1975-ஆம் ஆண்டில் நமது சமூகம் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்ற பிறகு திருச்சிராப்பள்ளி மாவட்ட சோழிய வெள்ளாளர் சங்கம் என மாற்றம் பெற்று பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவருகிறது.
நமது சங்கத்தின் தோற்றுவாய் உறுப்பினர்களாக திரு V கல்யாணசுந்தரம் பிள்ளை Dr.G விஸ்வநாதம் பிள்ளை, Dr.G சிற்றம்பலம் பிள்ளை, ராவ்சாஹிப் நாகராஜ பிள்ளை, திரு எம் முத்துசாமி பிள்ளை, திரு M. மாணிக்கவாசகம் பிள்ளை, திரு V P அருணகிரி, திரு T S சச்சிதானந்தம் பிள்ளை, திரு M சுப்ரமணிய பிள்ளை, Dr.T V. ரெங்கநாதன் பிள்ளை, திரு R P மதுரநாயகம் பிள்ளை, ராவ்சாஹிப் A சிதம்பரம் பிள்ளை, திரு K A P.விஸ்வநாதம் பிள்ளை, திரு A .ஆறுமுகம் பிள்ளை, TV. ஆறுமுகம் பிள்ளை, TP. சிவானந்தம் பிள்ளை, VT. வைத்தியலிங்கம் பிள்ளை, Dr.M.கிருஷ்ணமூர்த்தி ஆகிய பெரியோர்களை கொண்டு, நமது சமுதாயம் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும், நம் சமூக மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபடுவதும், சமூக ஏழைக் குழந்தைகளுக்கு உபகார நிதியுதவி செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்ற உயரிய குறிக்கோளுடன் சங்கம் தொடங்கப்பட்டது.
கொள்கைகளும் நோக்கங்களும்
1 சோழிய வெள்ளாளர் சமூகம் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைய பாடுபடுதல்.
2 சமூக ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகார சம்பளம், மற்றும் இதர பொருளுதவி அளித்தல்.
3 கல்வி நிலையங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள், புதிதாக அறக்கட்டளைகள் நிறுவி நிர்வகித்தல்.
4 மாணவ, மாணவியருக்கான விடுதி, சமூக விடுதி, திருமண மண்டபம், தொழிற்கூடங்கள், மருத்துவமனை ஏற்படுத்துதல்.
5 நம் இனத்தவற்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்தல்.
நமது சங்கம் பல மாநாடுகள் நடத்திக்காட்டியும், வேறு பல முயற்சிகள் எடுத்துக்கொண்டதின் பலனாக தமிழகம் முழுவதும் வாழும் சோழிய வெள்ளாளர் இனம் தமிழக அரசின் உத்தரவு எம்.எஸ் எண் 505ன் நாள் 5-7-1975 ன் படி பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
Our Mission
Change our Community for Better Futures
திரு ஜே.ஏ. அம்பா சங்கர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணை எண் 3078 நாள் 13-12-82ன் படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்பட்ட வகுப்பினர் நலக்குழுவை சந்தித்து உரிய புள்ளி விவரங்களை கொடுத்து, நமது இனம் பின்தங்கிய நிலையை விளக்கி தெரிவித்ததை ஏற்றுக்கொண்டதின் விளைவாக தமிழ்நாட்டில் சோழிய வெள்ளாளர் சமூகம் பிற்பட்டோர் பட்டியலில் தொடர்ந்து இருக்க தமிழக அரசு அறிவித்துள்ளது மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற அவ்வப்போது தேவையான புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டும், மேலும் தலைவர் டாக்டர் V. ஜெயபால் அவர்கள் தலைமையில் சங்க குழுவினர் சென்னை சென்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கருத்துரைகளை எடுத்துரைத்தனர். ஆணையம் அதனைப் பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளது.